கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 பேர் பலி


கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 பேர் பலி
x
தினத்தந்தி 26 May 2021 11:06 PM IST (Updated: 26 May 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 பேர் பலியானார்கள்.

கடலூர், 


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தும் நோய்த் தொற்று குறையவில்லை. இதற்கிடையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் குறைந்தபாடில்லை.


இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. இந்த நோய் வெளிநாடுகளில் அதிகமாக பரவி வந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் இருந்து வருகிறது.

இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர். இதன் விவரம் வருமாறு:-

கருப்பு பூஞ்சை

சேத்தியாத்தோப்பு மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 54). இவர் கடந்த 8-ந்தேதி சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்று அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது.

இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும் சர்க்கரை நோய் அளவு அதிகரித்து அவரது கை, விரல், முகம் கருப்பாக மாறியது. கண்களில் வீக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பதை கண்டறிந்தனர்.

 இதையடுத்து அவரை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.


Next Story