நாமக்கல் பகுதியில் மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள் வெளியீடு
நாமக்கல் பகுதியில் மின்தடை மற்றும் மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
தானியங்கி மின்தடை மையம்
நாமக்கல் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல் கோட்ட பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பயன்படும் வகையில் மின்தடை மற்றும் மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க கடந்த 2018-ம் ஆண்டு முதல் தானியங்கி மின்தடை மையம் மற்றும் வாட்ஸ்-அப் உதவி மையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இருப்பினும் பெருவாரியான பொதுமக்களுக்கு இந்த வசதி பற்றிய விவரங்கள் தெரியாமல் புகார்களை மின்வாரிய அலுவலர்களிடத்தில் தெரிவிக்க மிகவும் கால தாமதப்படுத்தி வருகின்றனர். எனவே நாமக்கல் மின் கோட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின்தடை மற்றும் மின்சாரம் தொடர்பான புகார்களை நாமக்கல்- பரமத்தி ரோட்டில் உள்ள நாமக்கல் துணை மின்நிலைய வளாகத்தில் உள்ள கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி நிவர்த்தி மையத்தை 1912 அல்லது 1800-425-19124 மற்றும் 04286-221912 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம். இதன்மூலம் உடனடியாக பொதுமக்களின் புகார்கள் அலுவலர்களால் பதிவு செய்யப்பட்டு, வரிசைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
செல்போன் எண்கள்
மேலும் அந்தந்த பகுதிக்கு உண்டான உதவி செயற்பொறியாளர்களிடம் செல்போன் மூலம் குறைகளை அறிவிக்கலாம். அதன்படி நாமக்கல்லில் சேலம் ரோடு, திருச்சி ரோடு, திருச்செங்கோடு ரோடு, துறையூர் ரோடு, கொசவம்பட்டி, நல்லிபாளையம் பகுதி மக்கள் 94458-52445 என்ற எண்ணிலும், பரமத்திரோடு, போதுப்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, வளையப்பட்டி, முதலைப்பட்டி, காலப்பள்ளி, என்.புதுப்பட்டி பகுதி பொதுமக்கள் 94458-52451 என்ற எண்ணிலும், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதி மக்கள் 94458-52449 என்ற எண்ணிலும், சேந்தமங்கலம் சுற்று வட்டார பகுதி மக்கள் 94458-52447 என்ற எண்ணிலும், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் பகுதி மக்கள் 94458-52446 என்ற எண்ணிலும், செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துபாளையம், புதுச்சத்திரம், களங்காணி சுற்று வட்டார பகுதி மக்கள் 94458-52448 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
புகார்கள்
மேலும் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் பாதுகாப்பில்லாத ஆபத்து விளைவிக்கும் நோக்கில் கண்டறியப்படும் உடைந்த, சாய்ந்த மின்கம்பங்கள் மற்றும் தாழ்வாக உள்ள மின்பாதைகள், பழுதான தெருவிளக்கு மீட்டர் பெட்டிகள், அறுந்து போன கம்பிகள் தொடர்பான புகார்களை தெளிவான விலாசத்துடன் வாட்ஸ்-அப் உதவி மைய எண்ணான 94458-51912 தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம்.
இதில் திருப்தி ஏற்படாவிட்டால் நாமக்கல் கோட்ட செயற்பொறியாளரை 94458-92390 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
ராசிபுரம், பரமத்திவேலூர்
இதேபோல், ராசிபுரம் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் உதவி செயற்பொறியாளரை 94458-52517 என்ற எண்ணிலும், ராசிபுரம் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் உதவி செயற்பொறியாளரை 94458-52518 என்ற எண்ணிலும், நாமகிரிப்பேட்டை கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் உதவி செயற்பொறியாளரை 94458-52519 என்ற எண்ணிலும், மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள் உதவி செயற்பொறியாளரை 94458-52521 என்ற எண்ணிலும், ராசிபுரம் செயற்பொறியாளரை 94458-52420 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்கள், குறைகளை தெரிவிக்கலாம்.
வேலூர், கபிலர்மலை, நல்லூர் மற்றும் மோகனூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் தொடர்பான புகார்கள், குறைகள் இருப்பின், அதனை வேலூர் செயற்பொறியாளர் ராணியை 94458-52430 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்
Related Tags :
Next Story