கோவையில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்


கோவையில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 26 May 2021 11:55 PM IST (Updated: 26 May 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற கோரி நேற்று கோவையில் பல்வேறு வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

கோவை

வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற கோரி  கோவையில் பல்வேறு வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது. 

கருப்புக்கொடி கட்டி போராட்டம் 

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கி நேற்றுடன் 6 மாதம் முடிந்து உள்ளது. எனவே இதை கருப்பு நாளாக கடைபிடிக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்படி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன், கோவை மாவட்ட தொழிற்சங்க கூட்டுக்குழுவை சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினார்கள். 

கோவை எம்.பி. 

கோவை சித்தாபுதூரில் குடியிருந்து வரும் பி.ஆர்.நடராஜன் எம்.பி., தனது வீட்டில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினார். அதுபோன்று காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் கருப்புக்கொடி கட்டப்பட்டது.

இந்த போராட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கூறும்போது, விவசாயிகள் 6 மாத காலம் டெல்லியில் போராட்டம் நடத்தியும் இதுவரை மத்திய அரசு வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறவில்லை. பா.ஜனதா அரசுக்கு விவசாயிகள் நலனில் அக்கறை இல்லை என்றனர்.

விவசாயிகள்

இதேபோல் கோவை புறநகர் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் வீடுகள் மற்றும் தோட்டங்களில் கருப்புக்கொடியை கட்டி போராட்டத் தில் ஈடுபட்டனர். 

த.மு.மு.க. சார்பில் கோவை கரும்புக்கடை, ஆத்துப் பாலம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருப்பு தினமாக அனுசரித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டினர்.


Next Story