வால்பாறையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகளில் உலா வரும் கால்நடைகள்
வால்பாறையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால், சாலைகளில் கால்நடைகள் உலா வருகின்றன. அவற்றை வேட்டையாட சிறுத்தைகள் வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால், சாலைகளில் கால்நடைகள் உலா வருகின்றன. அவற்றை வேட்டையாட சிறுத்தைகள் வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
அட்டகாசம்
வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தேயிலை தோட்டங்களை சுற்றி அடர்ந்த வனப்பகுதி காணப்படுகிறது.
இதில் சிறுத்தை, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதற்கிடையில் தேயிலை தோட்டங்களை ஒட்டி பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகள் அமைந்து உள்ளன.
மேலும் அருகில் வனப்பகுதி யும் உள்ளதால், அந்த குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. குறிப்பாக சிறுத்தைகள் அட்ட காசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கால்நடைகள் நடமாட்டம்
இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரண மாக பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
இதனால் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இன்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதைத்தொடர்ந்து அங்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி விட்டது.
நகரின் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி கிடப்பதால், அங்கு கால்நடைகள் அதிகளவில் உலா வருவதை காண முடிகிறது.
ஊருக்குள் நுழையும் சிறுத்தைகள்
இந்த கால்நடைகளை வேட்டையாட சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். குறிப்பாக இதுவரை நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஊருக்குள் புகுந்த சிறுத்தைகள், தற்போது பகல் நேரங்களிலேயே ஊருக்குள் நடமாடி வருகிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை நகரில் சுற்றித்திரிய விடவேண்டாம் என்று பொது மக்களை கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
தெருநாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை எனினும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story