கொரோனா தடுப்பூசி முகாம்
அருப்புக்கோட்டையில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நகராட்சி ஆணையாளர் முகமது சாகுல்ஹமீது உத்தரவின்பேரில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் பழைய பஸ் நிலையத்திலுள்ள சுகாதார அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமில் பந்தல்குடி மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. முகாமில் கார், வேன், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. முகாமில் 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அய்யப்பன் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story