வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடந்தது.
பொள்ளாச்சி
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடந்தது.
கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டத்தை திரும்ப பெறக் கோரியும் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.
ஆனைமலை தாலுகாவில் வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், அங்கலகுறிச்சி, சின்னாறுபதி உள்பட பல்வேறு இடங்களில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.
கண்டுகொள்ளவில்லை
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கூறுகையில், டெல்லியில் கடந்த 6 மாதங்களாக போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
விவசாயிகளுக்கு எதிராகவே பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. எனவே விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது என்றனர்.
சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜே.கிருஷ்ணாபுரத்தில் தமிழக விவசாயி கள் பாதுகாப்பு சங்கத்தின் சுல்தான்பேட்டை ஒன்றிய நிர்வாகி மந்திரா சலம் தலைமையில், கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
இதில், பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் வீடுகள் மற்றும் தோட்டங்களில் கருப்புக்கொடி ஏற்றி இருந்தனர்.
Related Tags :
Next Story