இறந்து கிடந்த மயில்


இறந்து கிடந்த மயில்
x
தினத்தந்தி 27 May 2021 12:33 AM IST (Updated: 27 May 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் மயில் ஒன்று இறந்து கிடந்தது.

சிவகாசி, 
சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட சாமிபுரம் காலனியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மயில் ஒன்று இறந்து கிடந்தது.  விருதுநகர் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் டேனியல் இதுகுறித்து போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்தார். பின்னர் வனத்துறை ஊழியர் ஒருவர் சம்பவ இடத்துக்கு வந்து மயிலின் உடலை மீட்டு அதே பகுதியில் அடக்கம் செய்தார். இந்த மயில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இறந்து இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Next Story