ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம்


ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம்
x
தினத்தந்தி 27 May 2021 12:41 AM IST (Updated: 27 May 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கடந்த 16-ந் தேதி வசந்த உற்சவம் தொடங்கியது. 10-வது நாளான நேற்று ஆண்டாளுக்கும், ெரங்க மன்னாருக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னாருடன் காட்சியளித்தார். பொதுவாக இந்த வசந்த உற்சவ வைபவம் நாடகசாலை தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஆண்டாள் கோவிலிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டு பக்தர்கள் யாரும் இன்றி அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் விழா நடைபெற்றது. நேற்றுடன் இந்த விழா நிறைவடைந்தது. விழாற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story