ஆசிரியர் ராஜகோபாலன் விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. மீது அவதூறு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தி.மு.க. வக்கீல் புகார்


ஆசிரியர் ராஜகோபாலன் விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. மீது அவதூறு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தி.மு.க. வக்கீல் புகார்
x
தினத்தந்தி 26 May 2021 7:18 PM GMT (Updated: 26 May 2021 7:18 PM GMT)

ஆசிரியர் ராஜகோபாலன் விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. மீது அவதூறு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தி.மு.க. வக்கீல் புகார்.

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தி.மு.க. வக்கீல் பிரிவைச் சேர்ந்த சூர்யா வெற்றிகொண்டான் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து அவரை ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்தநிலையில் நாராயணன் சேஷாத்திரி என்பவர், கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் என்றும், அதனால் இந்த வழக்கை மூடி மறைத்துவிடுவார்கள் என்றும் சமூக வலைதளங்களில் ஆர்.எஸ்.பாரதியின் பெயரைக் கெடுக்கும் எண்ணத்தோடு கருத்து பதிவிட்டுள்ளார்.

இந்த அவதூறு பதிவு பல தரப்பட்டவர்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட ஆசிரியர், ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் என்பது பொய். எனவே நாராயணன் சேஷாத்திரி மற்றும் அவருடைய பதிவை பரப்பியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பதிவுகளை சமூக வலைதளத்தில் இருந்து உடனடியாக நீக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story