100 குடும்பத்தினர் அரசு பள்ளியில் தங்க வைப்பு


100 குடும்பத்தினர் அரசு பள்ளியில் தங்க வைப்பு
x
தினத்தந்தி 27 May 2021 12:49 AM IST (Updated: 27 May 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

100 குடும்பத்தினர் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

 நாகர்கோவில்:
தேரேகால்புதூர் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் திருப்பதிசாரம் நெசவாளர் காலனி குடியிருப்புக்குளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர், அப்பகுதியில் உள்ள 100 குடும்பத்தினர் பாதுகாப்பாக திருப்பதிசாரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காலை மற்றும் மதியம், இரவு உணவுகள் வழங்கப்பட்டன. 

Next Story