சேரன்மாதேவியில் வாகனம் மூலம் காய்கறி விற்பனை


சேரன்மாதேவியில்  வாகனம் மூலம் காய்கறி விற்பனை
x
தினத்தந்தி 27 May 2021 12:49 AM IST (Updated: 27 May 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவியில் வாகனம் மூலம் காய்கறி விற்பனை செய்யப்பட்டது.

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி நகர பஞ்சாயத்தில் உள்ள 18 வார்டுகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் வீடு வீடாக வாகனங்களில் சென்று காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன் தொடக்க நிகழ்ச்சி நகர பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடைபெற்றது.  சேரன்மாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் காதர் முன்னிலை வகித்தார்.

முன்னதாக நடமாடும் காய்கறி விற்பனை வாகன ஓட்டுனர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு நகர பஞ்சாயத்து சார்பில் கையுறை, முககவசம், சானிடைசர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் வருவாய் துறையினர், நகர பஞ்சாயத்து அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story