விவசாய சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


விவசாய சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 May 2021 1:13 AM IST (Updated: 27 May 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

விவசாய சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உசிலம்பட்டி,மே.
மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்றுடன் 6 மாதங்களை எட்டியுள்ள சூழலில் தமிழக விவசாய சங்கத்தினர் இந்த நாளை கருப்பு தினமாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி அருகே உள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்ட விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு குழுவினர் இணைந்து வீடுகள் தோறும் கருப்புக் கொடி கட்டியும், கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story