நோய் பாதிப்பால் 274 தெருக்கள் மூடப்பட்டுள்ளன
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நோய் பாதிப்பு உள்ள 274 தெருக்கள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
மதுரை,மே
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நோய் பாதிப்பு உள்ள 274 தெருக்கள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
கொரோனா நடவடிக்கை
மதுரையில் நாெளான்றுக்கு கிட்டத்தட்ட 1,500-க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கியிருக்கும் இடங்களை சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களிடமும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதற்கிடையே ஒரே தெருவில் 3 நபர்களுக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அந்தப்பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதாரத்துறை சார்பில் அந்த தெரு மூடப்படுகிறது.
மேலும் அந்தத் தெருக்களில் உள்ள நபர்களிடமிருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அந்தத் தெருக்களில் உள்ள நபர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். மதுரை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி நோய் பாதிப்பு உள்ளதால் நகர்ப் பகுதியில் 227 தெருக்களும், புறநகர் பகுதியில் 47 தெருக்களும் என மொத்தம் 274 தெருக்கள் மூடப்பட்டு சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதுபோல் 4 ஆயிரத்து 128 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள். மதுரையில் உள்ள 8 அரசு ஆஸ்பத்திரிகளில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 508 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகள் கையிருப்பு
மதுரை மாவட்டத்தில் அனைத்து மையங்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 330 தடுப்பூசிகளும், தாலுகா அரசு மருத்துவமனைகளில் 120 தடுப்பூசிகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 12 ஆயிரத்து 60 தடுப்பூசிகளும், மாவட்ட சுகாதார கிடங்கில் 36 ஆயிரத்து 210 தடுப்பூசிகள் என மொத்தம் 48 ஆயிரத்து 720 தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது போல லேசான பாதிப்பு உள்ளவர்களை கண்காணிக்க 13 கொரோனா கேர் சென்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story