நெல்லை அருகே கொரோனா பயத்தில் விஷம் குடித்த முதியவர் சாவு


நெல்லை அருகே  கொரோனா பயத்தில் விஷம் குடித்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 27 May 2021 1:28 AM IST (Updated: 27 May 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே கொரோனா பயத்தில் விஷம் குடித்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

ஆலங்குளம்:
நெல்லை அருகே கொரோனா பயத்தில் விஷம் குடித்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

முதியவர்

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள வெள்ளாளன்குளம் செல்வி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70). இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் இருந்து வந்த நிலையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் அவருக்கு கொரோனா பரிசோதனை எடுத்துள்ளனர்.

அதில் இருந்து தனக்கு கொரோனா உறுதியாகி விடுமோ? என்ற பயத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி ஆறுமுகம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

சாவு

அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் 20-ந் தேதி ஆறுமுகத்துக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள கொரோனா வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story