கடையம் அருகே மண் அள்ளிய 15 பேர் கைது
கடையம் அருகே மண் அள்ளிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடையம்:
கீழப்பாவூரை சேர்ந்த காளிமுத்து என்பவருக்கு கடையம் அருகே புங்கம்பட்டியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் இருந்து டிராக்டர்களில் மண் அள்ளி வந்து மற்றொரு தாழ்வான பகுதியில் மண்ணை போட்டு உயர்த்தியதாக கூறப்படுகிறது.
மேலும் ஊரடங்கு காலம் என்பதால் இதுகுறித்து தகவலறிந்த கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் போலீசார் புங்கம்பட்டியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டரில் மண் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அனுமதியின்றி மண் அள்ளியதாகவும், ஊரடங்கு விதிகளை மீறியதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்து உள்பட 15 பேரை கைது செய்தனர். மேலும் 12 டிராக்டர்கள், 2 பொக்லைன் எந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story