சென்னிமலை, பவானியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்


சென்னிமலை, பவானியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக  வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 27 May 2021 1:48 AM IST (Updated: 27 May 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை, பவானியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடைபெற்றது.

ஈரோடு
சென்னிமலை, பவானியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடைபெற்றது. 
வேளாண் சட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 6 மாதங்களாக கடும் குளிரிலும், வெயிலிலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் மற்றும் மின் மசோதா 2020-யை மத்திய அரசு திரும்ப பெற கோரியும் நேற்று நாடு முழுவதும் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்துவதாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு (தமிழ்நாடு) சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
கருப்பு கொடி போராட்டம்
அதன்படி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னிமலை அருகே விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கி.வே.பொன்னையன் தலைமையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. மேலும் சென்னிமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல வீடுகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்பு கொடியை கட்டியிருந்தனர்.
பவானி
பவானி அடுத்த மயிலம்பாடியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்று காலை 10 மணி அளவில் பவானி அருகே உள்ள மயிலம்பாடி பகுதியில் விவசாய நிலங்களில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கருப்பு கொடி கட்டப்பட்டது. ஈரோடு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயமா தலைமையில் மத்திய அரசின் வேளாண் சட்டத்தையும், மின்சார திருத்த சட்டத்தையும் திரும்பப் பெறக்கோரி கோஷம் எழுப்பினார்கள். 
பவானி ஒன்றிய செயலாளர் கதிர்வேல், ஒன்றிய பொறுப்பாளர்கள் புஷ்பா, முருகேசன், கருப்பணன் உள்பட பலர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

Next Story