மல்லிப்பட்டினத்தில் நாட்டுப்படகுகள் சேதம்


மல்லிப்பட்டினத்தில் நாட்டுப்படகுகள் சேதம்
x
தினத்தந்தி 27 May 2021 1:48 AM IST (Updated: 27 May 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

‘யாஸ்’ புயல் எதிரொலியாக மல்லிப்பட்டினத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் சிக்கி நாட்டுப்படகுகள் சேதம் அடைந்தன. படகுகளை பாதுகாக்கும் விதமாக தூண்டில் வளைவை உடனடியாக அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சேதுபாவாசத்திரம்:
‘யாஸ்’ புயல் எதிரொலியாக மல்லிப்பட்டினத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் சிக்கி நாட்டுப்படகுகள் சேதம் அடைந்தன. படகுகளை பாதுகாக்கும் விதமாக தூண்டில் வளைவை உடனடியாக அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 
மீனவ கிராமங்கள்
தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, அடைக்கத்தேவன், மந்திரிப்பட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டினம், கணேசபுரம் உள்ளிட்ட 32 மீனவ கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் 4500 நாட்டுப்படகுகள் மூலமாக மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் 146 விசைப்படகுகளும் உள்ளன.
தூண்டில் வளைவு இல்லை
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் ரூ.66 கோடிசெலவில் நவீன மயமாக்கப்பட்டது. அங்கு தூண்டில் வளைவு அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தூண்டில் வளைவு அமைக்கப்படவில்லை. 
தூண்டில் வளைவு அமைக்க பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தூண்டில் வளைவு இல்லாததால் மீன்பிடி படகுகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. கடல் சீற்றத்தின்போது படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைகின்றன.
படகுகளை நொறுக்கிய கஜா புயல் 
கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் 88-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சுக்குநூறாக நொறுங்கி, மீனவர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். மீன்பிடி தடை காலம் என்பதால் தற்போது சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களில் மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். 
நாட்டுப்படகுகளும் கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வங்க கடலில் உருவான யாஸ் புயல் நேற்று ஒடிசா அருகே நேற்று கரையை கடந்தது.
கடல் சீற்றம்
இதன் எதிரொலியாக தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை கடல் சீற்றமாக இருந்தது. சூறாவளி காற்றால் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் கரையில் தூக்கி வீசப்பட்டன. அப்போது படகுகள் ஒன்றோடு ஒன்று மோதின. இதில் ஒருசில நாட்டுப்படகுகள் சேதம் அடைந்தன. படகுகளை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்க உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

Next Story