முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம்; கலெக்டர் கதிரவன் தகவல்
முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
கட்டணம் நிர்ணயம்
தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் தமிழக முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்து உள்ளது. அதன்படி கோவிட்-19 சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
மக்களின் நலனை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக தமிழக அரசு இலவச மருத்துவ சேவையை செயல்படுத்தி வருகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கோவிட்-19 சிகிச்சைகளுக்கான தொகுப்பு வீதம், கட்டணமில்லா சிகிச்சை வழங்கும் வகையில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள ஏ1, ஏ2 தர ஆஸ்பத்திரிகளான சுதா, லோட்டஸ், அபிராமி கிட்னி கேர், கல்யாணி கிட்னி கேர், ஈரோடு பலதுறை, வீணா, சி.எஸ்.ஐ., காலிங்கராயன் மெடிக்கல் சென்டர் ஆகிய தனியார் ஆஸ்பத்திரிகளில் ஒரு நாளுக்கு ஆக்சிஜன் இல்லாத மிதமான சிகிச்சைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.18 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவு வெண்டிலேட்டர் வசதியுடனான சிகிச்சைக்கு ரூ.38 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதிக்கு ரூ.33 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை படிப்படியாக குறைப்பதற்கு ரூ.28 ஆயிரம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வெண்டிலேட்டர் வசதி
இதேபோல் ஏ3 முதல் ஏ6 வரையுள்ள தர ஆஸ்பத்திரிகளான கேர்24 மெடிக்கல் சென்டர், ஈரோடு மெடிக்கல் சென்டர், கே.எம்.சி.எச், மாருதி மெடிக்கல் சென்டர், செந்தில் பலதுறை, சி.கே.ஆஸ்பத்திரி, ஈரோடு எமர்ஜென்சி கேர், ஆர்த்தோ லைப், பிவெல், அரவிந்த், ஈரோடு காவிரி பலதுறை ஆகிய தனியார் ஆஸ்பத்திரிகளில் ஒரு நாளுக்கு ஆக்சிஜன் இல்லாத மிதமான சிகிச்சைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.16 ஆயிரத்து 500, தீவிர சிகிச்சை பிரிவு வெண்டிலேட்டர் வசதியுடனான சிகிச்சைக்கு ரூ.34 ஆயிரத்து 500, தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதிக்கு ரூ.30 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை படிப்படியாக குறைப்பதற்கு ரூ.25 ஆயிரத்து 500 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கட்டுப்பாட்டு அறை
ஈரோடு நந்தா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, கோபியில் உள்ள அபி எஸ்.கே.ஆஸ்பத்திரி, சத்தியமங்கலம் ரித்தீஷ் ஆஸ்பத்திரி, கே.ஜி.ஆர். சர்ஜிக்கல் நர்சிங்ஹோம் ஆகிய இடங்களில் ஒரு நாளுக்கு ஆக்சிஜன் இல்லாத மிதமான சிகிச்சைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.18 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவு வெண்டிலேட்டர் வசதியுடனான சிகிச்சைக்கு ரூ.38 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதிக்கு ரூ.33 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை படிப்படியாக குறைப்பதற்கு ரூ.28 ஆயிரமும், சத்தியமங்கலம் கே.பி.நர்சிங் ஹோம், பவானி ஸ்ரீ மணி ஆஸ்பத்திரி, பெருந்துறை கொங்கு ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் ஒரு நாளுக்கு ஆக்சிஜன் இல்லாத மிதமான சிகிச்சைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.16 ஆயிரத்து 500, தீவிர சிகிச்சை பிரிவு வெண்டிலேட்டர் வசதியுடனான சிகிச்சைக்கு ரூ.34 ஆயிரத்து 500, தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதிக்கு ரூ.30 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை படிப்படியாக குறைப்பதற்கு ரூ.25 ஆயிரத்து 500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
எனவே முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற விரும்புபவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும்போது காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். காப்பீட்டு அட்டை தொலைந்து விட்டால் பழைய அல்லது புதிய ரேஷன் கார்டு எண்ணை சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் உள்ள காப்பீட்டு திட்ட அதிகாரி அல்லது மாவட்ட காப்பீட்டு திட்ட அதிகாரி அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறையான 1077-க்கு தொடர்பு கொள்ளலாம்.
புகார்
இதேபோல் ரெம்டெசிவர் போன்ற மருந்துகளுக்கும், டைமர், எல்.டி.எச் போன்ற பரிசோதனைகளுக்கும் கூடுதல் கட்டணம் பயனாளிகளின் சார்பில் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ஆஸ்பத்திரிக்கு நேரடியாக வழங்கப்படும். இந்த காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறும் பயனாளியிடம் இருந்து எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படக்கூடாது. பொதுமக்களை பொறுத்தவரை மேற்கூறிய கட்டணம் பொது படுக்கை வசதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
தனியறை மற்றும் பிற வசதிகள் கொண்ட அறைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம். மேலும், ஆக்சிஜன் இல்லாத சிகிச்சைக்கு மாநகராட்சிக்கு எல்லைக்குள் ஏ1, ஏ2 தர ஆஸ்பத்திரிகள் கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 500 காப்பீட்டு இல்லாத இதர பொதுமக்களிடம் கட்டணமாக பெறலாம். எனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட கூடுதல் கட்டணங்களோ அல்லது காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகளிடம் கட்டணம் வசூலித்தாலோ 18004253993 மற்றும் 104 என்ற தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்குwww.cmchistn.comஎன்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story