தனியார் பள்ளி-கல்லூரி, சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஆக்சிஜன் வசதி இல்லாத 2,466 படுக்கைகள்; கலெக்டர் கதிரவன் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளி-கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் வசதி இல்லாத 2 ஆயிரத்து 466 படுக்கைகள் காலியாக உள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளி-கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் வசதி இல்லாத 2 ஆயிரத்து 466 படுக்கைகள் காலியாக உள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.
சிகிச்சை மையங்கள்
ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் நேற்று வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி, அந்தியூர் ஐடியல் பள்ளி, கோபி கலை அறிவியல் கல்லூரி, தாளவாடி ஜெ.எஸ்.எஸ். பள்ளி, சத்தியமங்கலம் ராகவேந்திரா பள்ளி, திண்டல் வேளாளர் கல்லூரி, அல்-அமீன் என்ஜினீயரிங் கல்லூரி, சென்னிமலை கொங்கு பள்ளிக்கூடம், செங்குந்தர் கல்லூரி ஆகியவற்றில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதுபோல் லோட்டஸ் ஆஸ்பத்திரி சார்பில் ஓட்டல் அட்ரியம், ஓட்டல் சிவரஞ்சனி ஆகியவற்றிலும், சி.கே.ஆஸ்பத்திரி சார்பில் ஓட்டல் கிராண்ட் இன்டர்நேசனல், ஔிரும் ஈரோடு அமைப்பு-கிறிஸ்து ஜோதி ஆஸ்பத்திரி சார்பில் பி.பி.அக்ரஹாரத்தில் கொரோனா மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
காலி படுக்கைகள்
இதுபோல் கூகலூர் ஆரம்ப சுகாதார நிலையம், நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையம், திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையம், சித்தோடு ஆரம்ப சுகாதார நிலையம், சென்னிமலை ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 855 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள் உள்ளன. இதில் 1,389 படுக்கைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட, ஆக்சிஜன் தேவையில்லாத நோயாளிகள் கவனிக்கப்பட்டு வருகிறார்கள். இங்கு 2 ஆயிரத்து 466 படுக்கைகள் காலியாக உள்ளன. அதிபட்சமாக அந்தியூர் ஐடியல் பள்ளிக்கூடத்தில் 1,242 படுக்கைகள் காலியாக உள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் கதிரவன் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story