வேளாண் சட்டங்களுக்கு எதிராக சேலத்தில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி த.மு.மு.க.வினர் போராட்டம்


வேளாண் சட்டங்களுக்கு எதிராக சேலத்தில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி த.மு.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 27 May 2021 3:59 AM IST (Updated: 27 May 2021 3:59 AM IST)
t-max-icont-min-icon

கருப்பு கொடி கட்டி த.மு.மு.க.வினர் போராட்டம்

சேலம்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராகவும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சேலம் மாவட்டத்தில் நேற்று த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடைபெற்றது. அதன்படி சேலம் செவ்வாய்பேட்டை, கோட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், சிலர் தங்களது கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். த.மு.மு.க. மாநில செயலாளர் இம்தியாஸ்கான் தலைமையில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
 அதேபோல் அம்மாபேட்டை பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சையது முஸ்தபா, மாவட்ட செயலாளர் இப்ராகிம், அம்மாபேட்டை பகுதி 44-வது கிளை செயலாளர் அலாவுதீன் உள்பட ஏராளமானோர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேகோரிக்கையை வலியுறுத்தி மேச்சேரியில் விவசாயிகள் சங்கத்தினர் தங்கள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

Next Story