கல்லாவி அருகே 900 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


கல்லாவி அருகே 900 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 27 May 2021 4:14 AM IST (Updated: 27 May 2021 4:14 AM IST)
t-max-icont-min-icon

கல்லாவி அருகே 900 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்லாவி:
ஊத்தங்கரை உட்கோட்டம் கல்லாவி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளிமலை கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊத்தங்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டி தலைமையில் கல்லாவி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன், மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோருடன் மதுவிலக்கு மற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது வெள்ளிமலையில் சோதனை செய்தபோது போலீசார் வருவதை அறிந்த சிலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் போலீசார் அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்ட 900 லிட்டர் ஊறல் இருப்பதை பார்த்தனர். இதையடுத்து 900 லிட்டர் சாராய ஊறல் கொட்டி அழிக்கப்பட்டது. இதுகுறித்து ஊத்தங்கரை மதுவிலக்கு பிரிவு மற்றும் கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story