26 பேருக்கு கொரோனா
தாராபுரத்தில் நேற்று அரசு, ஆஸ்பத்திரியில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தாராபுரம்
தாராபுரத்தில் நேற்று அரசு, ஆஸ்பத்திரியில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தாராபுரம் சுகாதாரத்துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமையில் சுகாதார துறையினர் நேற்று முன்தினம் கொளத்துப்பாளையம், பொன்னாபுரம், அலங்கியம் உள்ளிட்ட பகுதியில் 220க்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா பாிசோதனை செய்யப்பட்டது.
அதில் நேற்று அதன் முடிவுகள் வெளியான நிலையில் அதில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தாராபுரம் அரசு ஆஸ்பத்திாியில் ஏற்கனவே 130 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 26 பேர் சேர்த்து 156 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனா். அதில் நேற்று 12 பேர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் சுகாதார துறையினா் கிருமிநாசினி தெளித்தனா். மேலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story