பிறந்தநாளுக்கு சேமித்த பணத்தை கொடுத்த சிறுமி
கொரோனா நிவாரண நிதிக்காக பிறந்தநாளுக்கு சேமித்த பணத்தை சிறுமி வழங்கினார்.
தேனி:
தேனி சடையால் கோவில் தெருவை சேர்ந்தவர் கவிதா. இவருடைய 3 வயது மகள் யாழினி. இவர்கள் 2 பேரும், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.
அங்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கொரோனா நிவாரண நிதியாக சிறுமி யாழினி தனது உண்டியல் சேமிப்பு ரூ.1,540-ஐ வழங்கினார். அவருக்கு அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் கூறுகையில், "எனது உறவினர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்து விட்டார். இதனால் வீட்டில் நான் அழுது கொண்டிருந்ததை பார்த்துவிட்டு, தனது பிறந்தநாளில் புத்தாடை, கேக் வாங்குவதற்காக உண்டியல் சேமித்து வைத்த பணத்தை கொரோனா நிவாரணமாக கொடுக்க விரும்பினார்" என்றார்.
மாவட்டத்தில் சிறுவர், சிறுமிகள் ஆர்வத்தோடு தங்களின் உண்டியல் சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்குவது அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story