சூறாவளி காற்றுக்கு வேரோடு சாய்ந்த மரங்கள்
சூறாவளி காற்றுக்கு வேரோடு சாய்ந்த மரங்கள்
மடத்துக்குளம்
மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. இந்த சூறாவளி காற்றுக்கு அமராவதி பழைய வாய்கால் அருகே தென்னைமரம் ஒன்று, வேரோடு சாய்ந்தது. கடத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு, கடந்த 80 ஆண்டுகளுக்கும் பழமையான மரமும் வேரோடு சாய்ந்தது.
அப்போது மின்கம்பத்தின் விழுந்ததால், மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது.இதையடுத்து அந்த மரம் எந்திரத்தின் மூலம் மரம் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு, அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் அறுபட்ட மின்கம்பிகள் மின்வாரிய ஊழியர்களால், சரி செய்யப்பட்டு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story