சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது
அவினாசி அருகே சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 50 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
அவினாசி
அவினாசி அருகே சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 50 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
போலீசார் ரோந்து
அவினாசி போலீசார் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவினாசியை அடுத்த செம்பாக்கவுண்டம்பாளையத்தில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் செம்பாக்கவுண்டம்பாளையம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரனையில் அவர்கள் செம்பாக்கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 55 விக்னேஸ்வரன் 28, இவரது மனைவி காயத்திரி என்ற தீபா 23, முருகன் மனைவி சரசாள் என்ற லட்சுமி 45, மற்றும் கருமாபாளையத்தை சேர்ந்த ஆரான் என்ற ஆறுச்சாமி 65 என்பதும் தெரியவந்தது.
5 பேர் கைது
இவர்கள் 5 பேரும் அந்த பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு கேனில் மறைத்து வைத்திருந்த 10 லிட்டர் சாராயம், 50 லிட்டர் சாராய ஊறலையும் போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.
Related Tags :
Next Story