வேலூர் மாவட்டத்துக்கு 8 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி வருகை
வேலூர் மாவட்டத்துக்கு 8 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி வருகை
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்டத்துக்கு 40 ஆயிரம் டோஸ் கோவிசீல்டு தடுப்பூசிகள் வந்தன. ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி போட்டு கொள்கிறார்கள்.
கடந்த 2 வாரங்களாக மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை. அதனால் 2-வது முறை கோவேக்சின் தடுப்பூசி போடுவதற்காக 10 ஆயிரம் பேர் காத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி வேலூர் வந்தன. அவை அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2-வது முறையாக கோவேக்சின் தடுப்பூசி போடும் நபர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதல்முறையாக தடுப்பூசி போடுபவர்கள் கோவிசீல்டு போட்டு கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story