ராணிப்பேட்டை, லாலாபேட்டையில் விவசாயிகள் கருப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை, லாலாபேட்டையில் விவசாயிகள் கருப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை
டெல்லியில் விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்றுடன் 180 நாட்கள் நிறைவடைந்ததைதையொட்டியும், பிரதமர் மோடி பதவியேற்று 7 ஆண்டுகள் முடிவடைந்தும் விவசாயிகள் பிரச்சினை தீர்க்கப்படாததை கண்டித்தும் விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், ராணிப்பேட்டை மற்றும் லாலாப்பேட்டையில் கருப்புக்கொடி ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எல்.சி.மணி தலைமை தாங்கினார். லாலாபேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த சட்டத்தையும் வாபஸ் பெற வேண்டும், கொரோனா நிவாரணமாக அனைத்து குடும்பங்களுக்கும் இலவச உணவு தானிய பொருட்களுடன், மாதந்தோறும் ரூ.7500 வழங்க வேண்டும், உர விலை உயர்வு, பெட்ரோல் டீசல் சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Related Tags :
Next Story