நிலக்கோட்டையில் 100 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு இலவச அரிசி துணை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
நிலக்கோட்டையில் 100 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு இலவசமாக அரிசி வழங்கினார்.
நிலக்கோட்டை:
அய்யம்பாளையத்தை சேர்ந்த சமூக சேவகர் டாக்டர் கோபி கிருஷ்ணன் சார்பில் 100 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு இலவசமாக தலா 10 கிலோ அரிசி, நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு உட்கோட்டத்தில் பணிபுரியும் 250 போலீசார், முன்கள பணியாளர்களுக்கு முககவசம், கையுறை, கிருமிநாசினி, நிலவேம்பு, கபசுரகுடிநீர் பொடி பாக்கெட்டுகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் தலைமை தாங்கினார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பவுல் தேவதாசன், சுப்புலட்சுமி, சண்முக லட்சுமி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க ஒன்றிய தலைவர் சசிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story