தஞ்சை அருகே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
தஞ்சை அருகே சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வல்லம்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுபவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். இநத்நிலையில் நேற்று தஞ்சையை அடுத்துள்ள குருங்குளம் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் மேற்பார்வையில் வல்லம் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நாகப்ப உடையான்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. பின்னர் அந்த தோட்டத்திற்குள் நுழைந்த போலீசார் அங்கிருந்தவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் 50 லிட்டர் சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர். மேலும் 10 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகப்ப உடையான் பட்டியை சேர்ந்த கார்த்திக் (வயது 34), ராஜேந்திரன் ( 37), சத்தியராஜ் (39) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story