ரெயிலில் வந்த 2 ஆயிரத்து 600 டன் ரேஷன் கோதுமை
மேற்கு வங்காளத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 2 ஆயிரத்து 600 டன் ரேஷன் கோதுமை திண்டுக்கல்லுக்கு வந்தது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்டவை வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா காலமாக இருப்பதால் 3 மாதத்துக்கு தேவையான ரேஷன் பொருட்கள் இருப்பு வைக்கப்படுகிறது.
இதையொட்டி அரிசி, கோதுமை உள்ளிட்டவை ரெயில்கள் மூலம் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன்படி நேற்று மேற்கு வங்காளத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் ரேஷன் கோதுமை திண்டுக்கல்லுக்கு வந்தது.
அதில் மொத்தம் 2 ஆயிரத்து 600 டன் கோதுமை வந்தது. இதையடுத்து அவை முருகபவனத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
மேலும் ரேஷன்கடைகளுக்கு தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story