ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் பணியிடை நீக்கம்


ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 27 May 2021 8:43 PM IST (Updated: 27 May 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

கலவையில் பத்திரப்பதிவு செய்வதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கலவை

ரூ.20 ஆயிரம் லஞ்சம்

காஞ்சீபுரம் மாவட்டம் செவிலிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் கடந்த 3 ஆண்டுகளாக சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார்.
 பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் நிலத்தின் மதிப்புக்கு ஏற்ப இவர் லஞ்சம் கேட்டு பொதுமக்களுக்கு நெருக்கடி கொடுத்ததாக இவர் மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆதிமூலம் (60) என்பவர் தனது 2 ஏக்கர் நிலத்தை தனது மகன்களுக்கு பாகப்பிரிவினை செய்து பத்திரப்பதிவு செய்வதற்காக சார் பதிவாளரை அணுகி உள்ளார். இதற்கு நிலத்தை பார்வையிட ரூ.10 ஆயிரமும், பத்திரப்பதிவு செய்ய ரூ.10 ஆயிரமும் என மொத்தம் ரூ.20 ஆயிரம் கேட்டுள்ளார். 

பணியிடை நீக்கம்

அதன்பேரில் ஆதிமூலம் இடைத்தரகர் மூலமாக ரூ.10 ஆயிரம் முதலில் கொடுத்துள்ளார். பத்திரப்பதிவு முடிந்ததும் பத்திரம் வாங்க வரும்போது மீதி 10 ஆயிரம் பணத்தை கொடுப்பதாக கூறி உள்ளார். அதன்படி பத்திரம் வாங்க சென்றபோது இடைத்தரகர் மூலம் ரூ.10 ஆயிரம் கொடுத்து, அதை சார்பதிவாளரிடம் கொடுத்தபோது வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

அதைத்தொடர்ந்து சார்பதிவாளர் ரமேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Next Story