பாலியல் வன்கொடுமை வழக்கில் விரிவான அறிக்கை கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்


பாலியல் வன்கொடுமை வழக்கில் விரிவான அறிக்கை கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 27 May 2021 8:57 PM IST (Updated: 27 May 2021 8:57 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் வன்கொடுமை வழக்கில் விரிவான அறிக்கை கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 5 மாதங்களுக்கு முன்பு  மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அதே ஊரை சேர்ந்த ஒருவரால் பாலியல் வன்கொடுமையால் செய்யப்பட்டு உள்ளார். 
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தனர். 

இச்சம்பவத்தில் உடனடியாக குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான மருத்துவம், சட்டம், காவல் துறை, உளவியல் சார்ந்த உதவிகள் கிடைக்கப்பட்டு உள்ளதா என்றும், இச்சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாற்றுத் திறனாளிகள் நல ஆணைய மாநில ஆணையர் ஜானிடாம்வர்கீஸ் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோரிடம் விரிவான அறிக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

மேலும் விரிவான அறிக்கையை வருகிற 4-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 
அறிக்கைகளை தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story