2 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா


2 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 May 2021 9:36 PM IST (Updated: 27 May 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 34 பேர் பலியாகினர்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 34 பேர் பலியாகினர்.
2 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று குறையவில்லை. நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு தான் வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
16 ஆயிரத்து 52 பேர் சிகிச்சை
இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்களையும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 909 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 59 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 16 ஆயிரத்து 52 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுதவிர மாவட்டம் முழுவதும் உள்ள 121 கட்டுப்பாட்டு மண்டலங்களிலும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறி வெளியே வருகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
34 பேர் பலி
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் திருப்பூரை சேர்ந்த 18 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் என மொத்தம் 34 பேர் ஒரே நாளில் சிகிச்சை பலியின்றி பலியாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில்  பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 10 நாட்களுடன் ஒப்பிடுகையில் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை மேலும் கடும் கட்டுப்பாடுகளை திருப்பூருக்கு விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் திருப்பூர் மாநகரில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
------

-

Next Story