ஆரணியில் சாமி சிலைகள் உடைப்பு


ஆரணியில் சாமி சிலைகள் உடைப்பு
x
தினத்தந்தி 27 May 2021 10:08 PM IST (Updated: 27 May 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் சாமி சிலைகள் உடைப்பு

ஆரணி

ஆரணி புதுக்காமூர் பகுதியில் புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் கன்னியம்மன் கோவில் உள்ளது.   தற்போது ஊரடங்கு காரணமாக கோவில் அருகாமையில் பக்தர்கள் யாரும் வராததால், குடி மக்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று பகலில் கன்னியம்மன் கோவிலில் கருவறையில் இருந்த சாமி சிலைகள் அனைத்தும் பீடத்திலிருந்து உடைத்து எடுத்து கோவில் வளாகத்தில் வீசியுள்ளனர்.

 இதேபோல புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தின் பெயர் பலகையும் காணாமல் போயுள்ளது. அங்குள்ள திருமண மண்டபத்தில் வெளிப்புற கண்ணாடி முகப்புகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ம.சிவாஜி ஆரணி டவுன் போலீசில் கொடுத்த புகாரின் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன், ரகு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story