இருவேல்பட்டில் புதிய மின்மாற்றி பொருத்தம்


இருவேல்பட்டில் புதிய மின்மாற்றி பொருத்தம்
x
தினத்தந்தி 27 May 2021 10:24 PM IST (Updated: 27 May 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி செய்தி எதிரொலியால் இருவேல்பட்டில் புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டது.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் விளை நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றி மூலம் 20-க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் விவசாயிகள் மின் மோட்டார்களை கொண்டு தண்ணீரை இறைத்து விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் அந்த மின்மாற்றி பழுதானது. இதனால் தண்ணீர் பாய்ச்ச முடியாததால் பயிர்கள் கருக ஆரம்பித்தது. இது தொடர்பாக ‘தினத்தந்தி’யில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதை பார்த்த மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, புதிய மின் மாற்றி பொருத்த உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை 11 மணியளவில் அரசூர் உதவி மின் பொறியாளர் மீனலோச்சினி, மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நேரில் வந்து புதிய மின் மாற்றி பொருத்தி, விவசாய மின் மோட்டார்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், தங்களது பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினர். 

Next Story