சூதாடிய 4 பேர் கைது


சூதாடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 27 May 2021 10:52 PM IST (Updated: 27 May 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் சைக்கிள் நிறுத்தம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடியது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீ சார் ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகர் ஆதித்தன் (வயது37), நாகராஜன் மகன் வெள்ளைத்துரை (36), காட்டுப் பிள்ளையார் கோவில் தெரு ஆனந்தகுமார் (32), செல்ல பெருமாள் தெரு ஜீவராஜ் (37) என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சூதாட பயன்படுத்திய ரூ.6 ஆயிரத்து 20-ஐ பறிமுதல் செய்தனர்.

Next Story