டாஸ்மாக் கடையை உடைத்து 4 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
டாஸ்மாக் கடையை உடைத்து 4 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
அன்னூர்
அன்னூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.4½ லட்சம் மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
டாஸ்மாக் மதுக்கடை
கோவையை அடுத்த அன்னூர் தென்னம்பாளையம் சாலை காக்கா பாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. தற்போது முழு ஊரடங்கு காரணமாக அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை அந்த டாஸ்மாக் கடையின் ஷட்டர் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த வழியாக சென்ற ராஜ் குமார் என்பவர் பார்த்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித் தார். அதன்பேரில் அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கேமரா, பொருட்கள் சேதம்
அவர்கள் டாஸ்மாக் கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், டாஸ்மாக் கடையின் முன் சட்டர் கதவு மற்றும் அங்கிருந்த ஒரு கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து கடைக்குள் சென்று பார்த்த போது ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 720 மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
மேலும் அங்கிருந்த ரூ.90 ஆயிரத்து 660 மதிப்புள்ள கேமரா உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதும் தெரியவந்தது. இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story