சூளேஸ்வரன்பட்டியில் சூறாவளி காற்றால் மரக்கிளை முறிந்து சாலையில் விழுந்தது
சூளேஸ்வரன்பட்டியில் சூறாவளி காற்றால் மரக்கிளை முறிந்து சாலையில் விழுந்தது
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டியில் சாலையோரத்தில் ஆங்காங்கே மரங்கள் உள்ளன. இந்த நிலையில் திடீரென்று பலத்த சூறாவளி காற்று வீசியது.
இதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரு மரத்தின் கிளை முறிந்து நடுரோட்டில் விழுந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால் வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது.
மேலும் பொதுமக்கள் யாரும் அந்த வழியாக வரவில்லை. இதன் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் ஊழியர்கள் விரைந்து வந்து மரக்கிளையை வெட்டி அகற்றினர்.
Related Tags :
Next Story