குமரியில் கொரோனாவுக்கு 24 பேர் பலி


குமரியில் கொரோனாவுக்கு 24 பேர் பலி
x
தினத்தந்தி 27 May 2021 11:23 PM IST (Updated: 27 May 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 24 பேர் கொரோனாவால் பலியாகினர். புதிதாக 928 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 24 பேர் கொரோனாவால்  பலியாகினர். புதிதாக 928 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் ஆயிரத்தை தாண்டியே இருந்தது. ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக பாதிப்பு சற்று குறைந்து ஆயிரத்துக்கு கீழே இருந்து வருகிறது. நேற்று முன்தினம் புதிதாக 928 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் மட்டும் 182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே போல அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 114 பேரும், கிள்ளியூர்-57, குருந்தன்கோடு-120, மேல்புறம்-58, முன்சிறை-44, ராஜாக்கமங்கலம்-59, திருவட்டார்-125, தோவாளை-47 மற்றும் தக்கலை-122 பேர் என பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
இவர்களில் நோய்த்தொற்று குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலும், தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 442 ஆக உயர்ந்துள்ளது.
24 பேர் பலி
இது ஒருபுறம் இருக்க பலி எண்ணிக்கை குறைந்தபாடில்லை. குமரி மாவட்டத்தில் தினமும் கொரோனாவுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 10-ஐ தாண்டியே உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 24 பேர் உயிரை கொரோனா பறித்தது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 860 ஆக உயர்ந்துள்ளது.

Next Story