வெண்ணந்தூர் அருகே செல்போன் திருடிய 2 சிறுவர்கள் கைது


வெண்ணந்தூர் அருகே செல்போன் திருடிய 2 சிறுவர்கள் கைது
x
தினத்தந்தி 27 May 2021 11:40 PM IST (Updated: 27 May 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

வெண்ணந்தூர் அருகே செல்போன் திருடிய 2 சிறுவர்கள் கைது

வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அடுத்த ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் நேற்று அதிகாலை மசக்காளிப்பட்டியை சேர்ந்த பெரியசாமி (வயது 47) என்பவர் லாரியை நிறுத்தி விட்டு அதில் உறங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 சிறுவர்கள் லாரியில் ஏறி ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடிக்கொண்டு இறங்கினர். அந்தசமயம் லாரி டிரைவர் விழித்து கொண்டு 2 பேரையும் பார்த்து கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செல்போன் திருடிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்களிடம் வெண்ணந்தூர் போலீசார் விசாரணை செய்ததில் 2 பேரும் சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. 
மேலும் இந்த சிறுவர்கள் அடிக்கடி செல்போன் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் மீது சேலம் அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், இரும்பாலை போன்ற போலீஸ் நிலையங்களில் பல்வேறு செல்போன் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 சிறுவர்களையும் வெண்ணந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். பின்னர் 2 சிறுவர்களும் சேலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
========

Next Story