பணகுடி குத்திரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு


பணகுடி குத்திரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 27 May 2021 6:28 PM GMT (Updated: 27 May 2021 6:28 PM GMT)

பணகுடி குத்திரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பணகுடி:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால், பணகுடி குத்திரபாஞ்சான் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ரோஸ்மியாபுரம் பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

அனுமன் நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுமார் 32 கி.மீ. தூரம் வரையிலான பாசன குளங்களுக்கு கால்வாய்கள், ஓடைகள் வழியாக தண்ணீர் செல்கிறது. அனுமன் நதி மூலம் பாசன வசதி பெறும் சுமார் 20 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன.

மேலும் ஆலந்துறை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மியாபுதுக்குளம, சிவகாமிபுரம் குளம் நிரம்பியுள்ளது. மேலும் லெப்பைகுடியிருப்பு, காவல்கிணறு பகுதியில் உள்ள குளங்களுக்கும் உப்பு ஓடை, ஆலந்துறை ஆற்று தண்ணீர் செல்கிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் விவசாய பணிகளை ஆர்வமுடன் தொடங்கி உள்ளனர்.

Next Story