மீன்வெட்டி பாறை அருவியில் தண்ணீர் கொட்டுகிறது


மீன்வெட்டி பாறை அருவியில் தண்ணீர் கொட்டுகிறது
x
தினத்தந்தி 28 May 2021 12:22 AM IST (Updated: 28 May 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மீன்வெட்டி பாறை அருவியில் தண்ணீர் கொட்டுகிறது

ஸ்ரீவில்லிபுத்தூர்,மே
யாஸ் புயல் காரணமாக குமரி, நெல்லை, தென்காசி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.  குறிப்பாக, திற்பரப்பு மற்றும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டி வெள்ளக்காடாக உள்ளது.
அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் உள்ள மீன் வெட்டி பாறை அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. தொடர்ச்சியாக மழை பெய்தால் அருவியில் அதிக அளவு தண்ணீர் வந்து நீரோடைகளில் தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story