ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய 169 பேர் மீது வழக்கு; வாகனங்கள் பறிமுதல்


ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய 169 பேர் மீது வழக்கு; வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 May 2021 12:39 AM IST (Updated: 28 May 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய 169 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சாலையில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்த 169 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, 168 இருசக்கர வாகனங்களையும், நான்கு சக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் நேற்று முககவசம் அணியாத 88 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.17 ஆயிரத்து 600-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 2 பேருக்கு தலா ரூ.500 வீதம் ஆயிரம் ரூபாயும் அபராதமாக போலீசார் விதித்தனர். வருவாய்த்துறை சார்பில் முககவசம் அணியாத 49 பேருக்கு அபராதமாக மொத்தம் ரூ.9 ஆயிரத்து 800-ம், சமூக இடைவெளி பின்பற்றாத 5 பேருக்கு மொத்தம் ரூ.2 ஆயிரத்து 500-ம், அதிகளவு கூட்டம் கூட்டியதற்காக ஒருவருக்கு ரூ.5 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் முககவசம் அணியாத 4 பேருக்கு மொத்தம் ரூ.800 அபராதமாக விதிக்கப்பட்டது.

Next Story