டாஸ்மாக் கடையில் துளை போட்டு ரூ.1½ லட்சம் மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்
டாஸ்மாக் கடையில் துளை போட்டு ரூ.1½ லட்சம் மதிப்பிலான மதுப்பாட்டில்களை அள்ளிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கல்லல்,
டாஸ்மாக் கடையில் துளை போட்டு ரூ.1½ லட்சம் மதிப்பிலான மதுப்பாட்டில்களை அள்ளிச் சென்ற கொள்ளையர்களை ேபாலீசார் தேடி வருகிறார்கள்.
டாஸ்மாக் கடை
இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் கல்லல் ரெயில் நிலையம் எதிரே உள்ள காட்டுப்பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையும் மூடப்பட்டு இருப்பதால், தினந்தோறும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
ரூ.1½ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
கேட்டை உடைக்க முடியாததால் கடையின் பின்புறத்தின் சுவரில் ஒரு ஆள் உள்ளே இறங்கும் அளவிற்கு துளை போட்டு அதன் வழியாக உள்ளே சென்று கடையின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமராவை மேல்நோக்கி திருப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான மதுப்பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளோடு அள்ளிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கல்லல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு, சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிவகங்கையில் இருந்து வந்த கைரேகை பிரிவு போலீசாரும் அங்கு தடயங்களை பதிவு செய்தனர். இச்சம்பவம் குறித்து கல்லல் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story