வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு


வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 28 May 2021 1:03 AM IST (Updated: 28 May 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்ம வாலிபர் பறித்துச்சென்றார்.



மலைக்கோட்டை, 
திருச்சி கோட்டை பகுதியில் உள்ள வடக்கு ஆண்டார் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி மகள் பாப்பம்மாள் (வயது 55). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு 7 மணியளவில், அவர் தனியாக வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஹெல்மெட் அணிந்து வீட்டின் உள்ளே நுழைந்த வாலிபர் ஒருவர் பாப்பம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு திடீரென தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story