ஸ்ரீரங்கத்தில் குடும்பத்தகராறில் அண்ணன் கொலை; தம்பி கைது
ஸ்ரீரங்கத்தில் குடும்பத்தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கத்தில் குடும்பத்தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
மாநகராட்சி ஊழியர்
திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு முனிசிபல் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். மாநகராட்சி துப்புரவு பணியாளர். இவருடைய மகன்கள் துரைசாமி (வயது 35), அய்யப்பன் (28). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட துரைசாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
அய்யப்பன் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவா்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். இவர்கள் வீட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
கொலை
இந்தநிலையில் நேற்று மதியம் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த அய்யப்பன், தனது அண்ணன் துரைசாமியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் துரைசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story