திருச்சியில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் டிரோன் கேமராவை பார்த்து ஓட்டம்; போலீசார் எச்சரித்து அனுப்பினர்
ஊரடங்கு காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் டிரோன் கேமராவை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். பின்னர் போலீசார் அவா்களை எச்சரித்து அனுப்பினர்.
திருச்சி,
ஊரடங்கு காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் டிரோன் கேமராவை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். பின்னர் போலீசார் அவா்களை எச்சரித்து அனுப்பினர்.
கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் ரெயில்வே தண்டவாளத்தையொட்டியுள்ள மைதானத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நேற்று காலை கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர்.
டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு
இதையடுத்து காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையிலான போலீசார் ஹெலிகேம் எனப்படும் டிரோன் கேமராவை அந்தப்பகுதியில் இயக்கி கண்காணித்தனர். அப்போது மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் பறந்து வந்த கேமராவை பார்த்ததும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
அதற்குள் ஜீப்பில் அங்கு விரைந்து வந்த போலீசார், சிக்கிய ஒரு சில இளைஞர்களை ஊரடங்கு காலகட்டத்தில் இதுபோல் விதிமுறையை மீறி வெளியே நடமாடி விளையாடக்கூடாது என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story