2 நீர் நாய்கள் பிடிபட்டன


2 நீர் நாய்கள் பிடிபட்டன
x
தினத்தந்தி 28 May 2021 1:53 AM IST (Updated: 28 May 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

பொன்னமராவதி பகுதியில் 2 நீர் நாய்கள் பிடிபட்டன

பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள பழைய நெடுவயல் பகுதியில் உள்ள தட்டான் கண்மாயில் 2 கடல் நீர் நாய்கள் சுற்றித் திரிந்தன. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மலையாண்டி மற்றும் வார்பட்டு நவமணி ஆகியோர் திருப்பத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் கண்மாய்க்குள் இருந்த நீர் நாய் ஒன்றையும், அப்பகுதியில் சுற்றித் திரிந்த மற்றொரு நீர் நாயையும் பிடித்து சென்றனர். பெரும்பாலும் கடல் பகுதிகளில் சுற்றித்திரியும் இந்த நீர் நாய்கள் பொன்னமராவதி பகுதிக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை.


Next Story