மாவட்ட செய்திகள்

சென்னிமலை வட்டாரத்தில், ஒரே நாளில்2,120 பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + corona vaccine

சென்னிமலை வட்டாரத்தில், ஒரே நாளில்2,120 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னிமலை வட்டாரத்தில், ஒரே நாளில்2,120 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சென்னிமலை வட்டாரத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 120 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.
சென்னிமலை
சென்னிமலை வட்டாரத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 120 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.
சென்னிமலை
சென்னிமலை அருகே முகாசிபிடாரியூரில் உள்ள கொமரப்பா செங்குந்தர் மேல்நிலை பள்ளியில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு முகாசிபிடாரியூர் ஊராட்சி தலைவர் கேபிள் சி.நாகராஜ் தலைமை தாங்கினார். முகாமை சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ தொடங்கி வைத்தார்.
இதில் சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 1,120 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடுவதற்காக சுமார் 1,500 பேருக்கு மேல் வந்ததால் பள்ளி வளாகத்தில் கூட்டமாக காணப்பட்டது.
இதனால் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மேற்பார்வையில் போலீசார் விரைந்து சென்று தடுப்பூசி போட வந்த அனைவரையும் சமூக இடைவெளியுடன் நிற்க வைத்தனர். இதனால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பள்ளி வளாகத்துக்குள் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
வெள்ளோடு
இதேபோல் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் வெள்ளோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு குமாரவலசு ஊராட்சி தலைவர் பி.இளங்கோ தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் பேபி முருகேசன் முன்னிலை வகித்தார். முகாமை முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளருமான பி.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
முகாமில் வெள்ளோடு சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி ஈரோட்டில் இருந்தும் 18 வயது முதல் 44 வயது வரை உடைய 1,000 பேர் வந்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
2. கடலூர் மாவட்டத்திற்கு 12,900 கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டு வருகின்றனர்
கடலூர் மாவட்டத்துக்கு 12 ஆயிரத்து 900 கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது. இதையடுத்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
3. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு கிடையாது; சுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு கிடையாது என்று மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறினார்.