கறம்பக்குடியை சேர்ந்தவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று


கறம்பக்குடியை சேர்ந்தவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று
x
தினத்தந்தி 28 May 2021 2:20 AM IST (Updated: 28 May 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடியை சேர்ந்தவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டது

கறம்பக்குடி
கறம்பக்குடி அருகே உள்ள மானியவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 40). இவர், திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கால் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சொந்த ஊர் திரும்பினார். இந்தநிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது அவருக்கு முகத்தில் வீக்கம், கண்வலி போன்றவை ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


Next Story